/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயணியிடம் நகை திருட்டு; விருதுநகர் வாலிபர் கைது
/
பயணியிடம் நகை திருட்டு; விருதுநகர் வாலிபர் கைது
ADDED : நவ 13, 2024 11:20 PM

திண்டுக்கல்; திருப்பதி ரயிலில் பயணியின் நகையை திருடிய விருதுநகர் வாலிபரை திண்டுக்கல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
மதுரை கீழமாசி வீதியை சேர்ந்தவர் அபிராமி 35. குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு திருப்பதி - மண்டபம் ரயிலில் ஏ.சி., பெட்டியில் மதுரை திரும்பினார்.
நவ.5ல் நள்ளிரவு ரயில் திண்டுக்கல் வந்தபோது துாங்கிக்கொண்டிருந்த அபிராமியின் கைப்பையை வாலிபர் ஒருவர் திருடிச்சென்றுவிட்டார். அபிராமி திண்டுக்கல் ரயில்வே போலீசில் புகாரளித்தார்.
இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி, எஸ்.ஐ.,க்கள் அருணோதயம்,பாஸ்கர்,தனிப்பிரிவு போலீஸ் மணிவண்ணன் உள்ளிட்டோர் சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் வாலிபர் ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மாரிச்சாமி28, என தெரிய வந்தது. அவரை கைது செய்து நகைகளுடன் இருந்த கைப்பையை மீட்டனர்.

