நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியை சேர்ந்தவர் அழகிய மணவாளன். இவரது வீடு எம்.ஜி.ஓ. நகரில் உள்ளது. நேற்று முன்தினம் சென்னைக்கு உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றனர்.
இதனை அறிந்த திருடர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 அரை பவுன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர்.
கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.