/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்சில் ரூ.1 .50 லட்சம் திருட்டு
/
பஸ்சில் ரூ.1 .50 லட்சம் திருட்டு
ADDED : மார் 22, 2024 04:15 AM
பஸ்சில் ரூ.1 .50 லட்சம் திருட்டு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை சேர்ந்தவர் தீபராஜன்,53, இவர் எல். ஐ. சி., ஏஜென்ட் ஆக உள்ளார். இவர் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூல் செய்து அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்டுவதற்காக ரூ.1.50 லட்சத்தை பையில் கொண்டு சென்று தனியார் பஸ்ஸில் ஏறி அருப்புக்கோட்டை வந்துள்ளார். எல்.ஐ.சி., அலுவலகத்திற்குச் சென்று பணம் கட்டுவதற்காக பையை பார்த்த போது பையில் இருந்த பணத்தை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
- - -கஞ்சா விற்றவர் கைது
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் பள்ளி அருகில் போலீசார் சென்று சோதனை செய்தபோது வடக்குப் பட்டியைச் சேர்ந்த அரவிந்த், 23, வரலொட்டி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை அருகில் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த 90 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தற்கொலை
சிவகாசி: சிங்கம்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் 40. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். மது அருந்து பழக்கம் உள்ள இவரை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

