/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் வி.ஏ.ஓ., வீட்டில் ரூ.2.60 லட்சம் திருட்டு
/
முன்னாள் வி.ஏ.ஓ., வீட்டில் ரூ.2.60 லட்சம் திருட்டு
முன்னாள் வி.ஏ.ஓ., வீட்டில் ரூ.2.60 லட்சம் திருட்டு
முன்னாள் வி.ஏ.ஓ., வீட்டில் ரூ.2.60 லட்சம் திருட்டு
ADDED : பிப் 23, 2024 05:24 AM
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனியை சேர்ந்த முன்னாள் வி.ஏ.ஓ., பிரித்திவ்ராஜ் 41. விருப்ப ஓய்வு பெற்ற இவர் தற்போது பா.ஜ., சுற்றுச் சூழல் பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பந்தல்குடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். பின், இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து, சந்தேகம் அடைந்து பீரோவை பார்த்துள்ளார்.
அதிலிருந்த 2.60 லட்சம் ரூபாய் பணம், 2 ஸ்மார்ட் வாச்சுகள் திருடு போனது தெரிய வந்தது. வீட்டில் இருந்த சி.வி.டி.வி., காமிரா பதிவுகளை பார்த்த போது, இருவர் முகமுடி அணிந்த நபர்கள் நடமாடியது தெரிய வந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.---