/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு கல்லுாரிக்கு செல்ல டவுன் பஸ்கள் காலையில் இருக்கு; மாலையில் இல்லை மாணவர்கள் அவதி

ADDED : மார் 18, 2024 12:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளத்தில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கல்லுாரிக்கு செல்வதற்கு காலையில் பஸ் இருக்கும் நிலையில், மாலையில் கல்லுாரி முடிந்து வீடு திரும்புவதற்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் சி.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த அரசு கலைக் கல்லுாரி கடந்த வாரம் முதல் பிள்ளையார் குளத்தில் புதிதாக கட்டப்பட்ட சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.
900 மாணவர்கள் படிக்கும் நிலையில் கல்லுாரி வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் தனியார் பஸ்சில் படியில் தொங்கியும், கூரை மீது உட்கார்ந்தும் பயணித்தனர்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 டவுன் பஸ்கள் அரசு கல்லுாரிக்கு இயக்கப்பட்டது. அதுவும் போதுமான அளவிற்கு இல்லாததால் சிரமத்துடன் மாணவர்கள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாலை 4:00 மணிக்கு கல்லுாரி முடிந்து வீடு திரும்ப போதிய அளவிற்கு டவுன் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் ராஜபாளையம் சென்று அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் திரும்புகின்றனர். இதனால் கூடுதல் நேர விரயம், பண விரயத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே மாலை நேரத்திலும் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகமும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.