/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 ஆண்டுகளாக தெரு விளக்கு இல்லை
/
10 ஆண்டுகளாக தெரு விளக்கு இல்லை
ADDED : நவ 23, 2025 04:26 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே ஆலடிபட்டி காமராஜர் நகரில் 10 ஆண்டுகளாக தெருவில் மின் கம்பம் இருந்தும் விளக்கு இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆலடிபட்டி ஊராட்சி. இங்குள்ள புறநகர் பகுதியான காமராஜர் நகர் உருவாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முக்கியமாக தெருக்களில் மின் விளக்கு இல்லை. மின் கம்பம் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும் மின்விளக்கு இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடைபெற ஏதுவாக உள்ளது. மக்கள் பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்து மின்விளக்கு அமைக்க ஊராட்சி மெத்தனம் காட்டுகிறது. எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

