/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் 8 ஆண்டுகளாக தெரு விளக்குகள் இல்லை
/
திருத்தங்கலில் 8 ஆண்டுகளாக தெரு விளக்குகள் இல்லை
ADDED : ஏப் 20, 2025 04:15 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 22 வது வார்டு 14 வீட்டு பகுதியில் எட்டு ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 22 வது வார்டு 14 வீட்டு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் எட்டு ஆண்டுகளாக தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி முழுவதுமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இங்கு குடியிருப்பு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இருட்டை பயன்படுத்தி இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது.
இரு நாட்களுக்கு முன்பு இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் செயின், தோடுகளை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதனால் இப்பகுதி மக்கள் எப்பொழுதும் அச்சத்துடனே உள்ளனர். எனவே இங்கு உடனடியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

