/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் இருக்கு... குடிநீர் இல்லை: முழுமை ஆகாத ரோடு அவதியில் கன்னிச்சேரி புதுார் மக்கள்
/
குழாய் இருக்கு... குடிநீர் இல்லை: முழுமை ஆகாத ரோடு அவதியில் கன்னிச்சேரி புதுார் மக்கள்
குழாய் இருக்கு... குடிநீர் இல்லை: முழுமை ஆகாத ரோடு அவதியில் கன்னிச்சேரி புதுார் மக்கள்
குழாய் இருக்கு... குடிநீர் இல்லை: முழுமை ஆகாத ரோடு அவதியில் கன்னிச்சேரி புதுார் மக்கள்
ADDED : அக் 21, 2024 04:39 AM

விருதுநகர்: ஜல் ஜீவன் குழாய் இருந்தும், குடிநீர் வராத சூழல், தெருக்களில் ரோடு இல்லாததால் சேறும், சகதியுமான மண் ரோட்டில் செல்ல முடியாத நிலை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் கன்னிச்சேரிபுதுார் ஊராட்சியின் 2வது, 7வது வார்டு மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரிபுதுாரில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. இதில் 2வது வார்டு வ.உ.சி., தெருவில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. ஆனால் தண்ணீர் இணைப்பு வழங்காமல் கான்கீரிட் துாண்கள் மட்டும் நிறுவப்பட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல் வாகனங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். தெருக்களுக்கு செல்லும் ரோடுகள் சேறும், சகதியுமாக உள்ளன. வாறுகால் இல்லாததால் கழிவு நீர் மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதே பிரச்னை 7வது வார்டிலும் தொடர்கிறது.
ஊராட்சியின் மற்றொரு தெருவில் வாறுகால் கான்கீரிட் மீது ஜல் ஜீவன் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டால் வாறுகால் கான்கீரிட் உடைத்து பழுது சரிசெய்ய வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
இது குறித்து கலெக்டர், பி.டி.ஓ.,க்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியிருப்புகள் உள்ள தெருக்கள், மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் பள்ளத்திலும், பெயரளவிற்கும் குழாய்களை பதித்துள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- பாண்டிச்செல்வி, குடும்பத் தலைவி.
கன்னிச்சேரிபுதுார் 2வது வார்டு வ.உ.சி., தெருவில் ரோடு இல்லை. மண் ரோடு முழுவதும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மழையில் சேறும், சகதியுமாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
- சோலையம்மாள், குடும்பத் தலைவி.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் இல்லை. இதனால் தெருக்களில் செல்லும் கழிவு நீரில் மழை நீர் கலக்கிறது. இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- முத்துலட்சுமி, குடும்பத் தலைவி.