/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு, தீப்பெட்டி அச்சகத் தொழிலில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
/
பட்டாசு, தீப்பெட்டி அச்சகத் தொழிலில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
பட்டாசு, தீப்பெட்டி அச்சகத் தொழிலில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
பட்டாசு, தீப்பெட்டி அச்சகத் தொழிலில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ADDED : ஏப் 05, 2024 06:20 AM

சிவகாசி : லோக்சபா தேர்தல் நடைபெறுவதை ஒட்டி விருதுநகர் லோக்சபா தொகுதியைச் சேர்ந்த சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு தொழிலாளர்களை இழுப்பதால் பட்டாசு, தீப்பெட்டி அச்சகத் தொழிலில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்.19ல் நடக்கிறது. விருதுநகர் தொகுதியில் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரசாரம் சூடு பிடித்து வருகின்றது. முன்பு போல மக்களை கவர்ந்த தலைவர்கள் இல்லாததால் தற்போது எந்த கட்சி தலைவராக இருந்தாலும், வேட்பாளராக இருந்தாலும், பிரசாரத்திற்கு வருகின்ற முக்கிய வி.ஐ.பி., ஆக இருந்தாலும் அவர்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டியநிலைக்கு கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
முக்கிய தலைவர்கள் வரும்போது கூட்டம் குறைந்தால், அவர்கள் அப்செட்டாக நேரிடுகிறது. இதனால் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எப்படியாவது கூட்டம் சேர்க்க போராடுகின்றனர். சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பிரதானமாக உள்ளது.
இந்நிலையில் பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள், வேட்பாளர்களுக்காக கட்சியினர் கூட்டத்தை சேர்ப்பதற்காக இந்த தொழிலாளர்களை தான் நாடுகின்றனர். இதற்காக அவர்களிடம் தங்கள் தலைவர்கள் வருவதற்கு முதல் நாளே தகவல் தெரிவித்து முன்பணம் கொடுக்கின்றனர்.
குறைந்த நேரத்தில் ரூ.200 முதல் 300 வரை கிடைப்பதால் தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு கூட்டத்திற்கு வந்து விடுகின்றனர். இதனால் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. தேர்தல் நடைபெறும் நாள் வரை இதே நிலைதான் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

