/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரம் ஊருணியில் இல்லை தடுப்புச்சுவர்
/
மம்சாபுரம் ஊருணியில் இல்லை தடுப்புச்சுவர்
ADDED : டிச 01, 2024 04:34 AM

சிவகாசி; சிவகாசி அருகே மம்சாபுரத்தில் பள்ளி செல்லும் வழியில் உள்ள ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி மம்சாபுரத்தில் எம்.துரைச்சாமிபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஊருணியில் தடுப்புச் சுவர் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இவ் வழியாக மாணவர்களும், எம். துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் இந்த ரோட்டில் சென்று வரும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிறிது கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஊருணியில் விழ வாய்ப்புள்ளது.
மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் விபத்து அபாயம் நேரிடுகிறது.
எனவே ஊருணியில் உடனடியாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.