/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிட்கோ தொழிற்பேட்டையில் ரோடே இல்லை ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அவதி
/
சிட்கோ தொழிற்பேட்டையில் ரோடே இல்லை ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அவதி
சிட்கோ தொழிற்பேட்டையில் ரோடே இல்லை ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அவதி
சிட்கோ தொழிற்பேட்டையில் ரோடே இல்லை ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 05, 2024 05:25 AM

விருதுநகர் : விருதுநகரின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்ல ரோடே இல்லை. இதனால் நிறுவனங்களுக்கு சரக்கு கொண்டு வரும் வாகனங்கள், ஊழியர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. வாகன விபத்துக்களும் அதிரித்துள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனங்கள் சிட்கோ தொழிற்பேட்டை விருதுநகரில் உள்ளது. இந்த பகுதியில் தனியார் நுாற்பாலைகள், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்படுகிறது.
இந்த தொழிற்பேட்டைக்கு செல்ல ஏதுவாக முகப்பு பகுதி இரண்டு ரோடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடுகள் மண்ரோடாகவும், பள்ளங்களால் குழிகள் நிறைந்து உள்ளது. கனமழைக்காலங்களில் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்கிறது.
ரோடுகளில் மழை நீர் செல்ல வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் 2 ஆயிரம் பேர் பணிசெய்யும் நிலையில் ரோடு மோசமாக உள்ளதால் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
தொழிற்பேட்டையை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையை போல தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியை மேம்படுத்தவும் நடவடிக்கை தேவை. எனவே தொழிற்பேட்டை பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.