/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு போலீசாருக்கு அறை இல்லை
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு போலீசாருக்கு அறை இல்லை
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு போலீசாருக்கு அறை இல்லை
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு போலீசாருக்கு அறை இல்லை
ADDED : பிப் 14, 2025 06:24 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு தனி அறை இல்லை. இதனால் மழை, வெயில், பனியில் பணிபுரிய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் மருத்துவமனையில் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறைத் தலைவர் டாக்டர் பாலாஜியை, வாலிபர் கத்தியால் குத்திய சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பணியாற்றுவதற்காக விருதுநகர் சப் டிவிஷனில் அனைத்து ஸ்டேஷன்களிலும் இருந்து போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு இதுவரை அறைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மழை, வெயில், பனியில் தொடர்ந்து பணியாற்றும் போலீசாருக்கு கழிவறை வசதிகள் கூட இல்லாமல் சிரமத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தனி அறை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.