/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரவிய ஆகாயத்தாமரை, தேங்கிய கழிவுநீரால் செவல் கண்மாய் நிரம்பியும் பயன் இல்லை

ADDED : டிச 18, 2024 05:44 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை செவல் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகள், விடப்படும் கழிவு நீராலும் கண்மாயில் கன மழைக்கு நிறைந்தும் பயனில்லாமல் போய்விட்டது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் செவல் கண்மாய் உள்ளது. ஒரு காலத்தில் இந்த பகுதி முழுவதும் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டது. நாளடைவில் பராமரிப்பு இன்றி ஆகாய தாமரை முளைத்தும், அந்தப் பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர் விடப்பட்டும் கண்மாய் சுகாதார கேடாக ஆனது. பல ஆண்டுகளாக இதே நிலையில் இருப்பதால் கண்மாயில் இருக்கின்ற தண்ணீர் கெட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு கண்மாயை தூர்வார நகராட்சி மூலம் 4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணியும் கிடப்பில் போடப்பட்டது. கண்மாயில் மீண்டும் ஆகாய தாமரைகள் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பெய்த கன மழையில் கண்மாய் நிறைந்துள்ளது. இத்துடன் கழிவு, குப்பைகளும் கலந்துள்ளதால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் செலவழித்து கண்மாயை புனரமைக்கும் பணியை உரிய நேரத்தில் செய்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். தற்போது கண்மாய் நிறைந்தும் பயன் இல்லை.
நகராட்சி நிர்வாகம் கண்மாயை தூர்வார தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.