/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பால வேலை நடைபெறும் இடத்தில் இல்லை எச்சரிக்கை பலகை
/
பால வேலை நடைபெறும் இடத்தில் இல்லை எச்சரிக்கை பலகை
ADDED : மார் 03, 2024 05:46 AM

நரிக்குடி: நரிக்குடி சுள்ளங்குடி ரோட்டில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
நரிக்குடி சுள்ளங்குடிக்கு செல்லும் ரோட்டில் உள்ள பழைய பாலம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. விபத்திற்கு முன் இதனை அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்ட வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
3 கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியிருக்கிறது. மாணவர்கள், வயதானவர்கள் நடந்து சென்று வருவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் பாலம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதை எச்சரிக்கை தகவல் பலகை இல்லை.
இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். விபத்தை தவிர்க்க எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமத்தினரின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.

