/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை புள்ளி விபரத்துடன் பேசுவது நல்லது அன்புமணிக்கு துரைமுருகன் அறிவுரை

ADDED : ஆக 05, 2025 06:51 AM
சிவகாசி : சிவகாசி தேவர்குளம் அம்மாள் நகரை சேர்ந்தவர் தர்ம ஜெயஸ்ரீ 35. இவர் டூவீலரில் சென்றபோது இரு மர்மநபர்கள் அவரிடம் இருந்து 5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர்.
இது குறித்து டவுன் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சாட்சியா புரம் ஆசாரி காலனியை சேர்ந்த அழகுராஜா 36, மாரனேரி முனீஸ்நகரை சேர்ந்த மகேஸ்வரன் 35 ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பளித்தார்.