/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வலியுறுத்துகிறார் திலகபாமா

ADDED : ஆக 25, 2025 01:32 AM
சிவகாசி: ''தி.மு.க.,விற்கு எதிராக அ.தி.மு.க., மட்டுமல்ல த.வெ.க., என அனைத்துமே ஒன்று சேர்ந்தால் அது மிகப் பெரிய களமாக மாறும்'' என சிவகாசியில் பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டில் விஜய் என்ற நடிகரை பார்க்க கூட்டம் கூடியது. பா.ம.க., என்பது ஒன்றுதான்.
அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச் செயலாளர் என்று கூறியவர்கள் எல்லாம் இன்றைய தினம் காணாமல் போய்விட்டனர்.
ஆனால் சட்ட ரீதியாக ஒரு அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அன்புமணி தெளிவாக செய்து கொண்டிருக்கிறார்.
ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை. ராமதாஸ் துணிச்சலாக எதையும் விமர்சனம் செய்யலாம் என சொல்லிக் கொடுத்ததன் அடிப்படையில் தான் எங்களின் விமர்சனங்கள் எல்லாம் அமைந்திருந்தது. பா.ம.க., கூடிய விரைவில் ஒன்றாக இணைந்து ஒரே களம் காணும்.
இன்றைய தினம் மக்கள் விரோத அரசாக தி.மு.க., உள்ளது. மக்கள் மிகப்பெரிய விரக்தியில் இருக்கின்றனர். அரசு அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.