நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சக்தி சுப்பிரமணியர் கோயில் கந்த சஷ்டி பூஜை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து ஒரு வாரம் நடந்த திருவிழாவில் தினமும் சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இரு நாட்களுக்கு முன்பு கோயில் சூரசம்காரம் நடந்தது. திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமிகள் ஊஞ்சலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்