/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள்
/
டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள்
டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள்
டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள்
ADDED : மார் 27, 2025 06:07 AM

சிவகாசி: சிவகாசியில் டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள் எழுதி பாதுகாப்பு தடுப்பு வைத்திருப்பதால் மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் குப்பைகள் கொட்டுவதாலும் கழிவு நீர் கலப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுத்தியதோடு சுகாதார கேடும் ஏற்பட்டது.
மேலும் கண்மாய் கரை முழுவதுமே திறந்த வெளி கழிப்பறையாக மாறியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
எனவே கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காகவும் கரையில் இரண்டு மீட்டர் அகலம் 841 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாதை அமைக்கவும், தெருவிளக்குகள், இருக்கைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பூங்கா அமைக்கவும் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கண்மாய் கரை நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை சுற்றி பாதுகாப்பிற்காக இரும்பில் லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறளை எழுதி வைத்துள்ளனர். இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கமிஷனர் கூறுகையில், டிரான்ஸ்பார்மரில் பாதுகாப்புக்காக பலகைகள் வைத்தாலும் மக்கள் அங்கே குப்பை கொட்டி விடுகின்றனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்கள் அங்கே குப்பைகளை கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது, என்றார்.