/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருப்பரங்குன்றம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கருத்து
/
திருப்பரங்குன்றம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கருத்து
திருப்பரங்குன்றம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கருத்து
திருப்பரங்குன்றம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கருத்து
ADDED : ஜன 26, 2025 08:16 AM

விருதுநகர்: திருப்பரங்குன்றம் பகுதி எப்போதும் போல அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது: தி.மு.க., திருந்தியிருக்கும் என நம்பி மக்கள் ஆட்சியை கொடுத்தனர். வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
வேங்கைவயல் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு கொள்கை, பிராமணர் எதிர்ப்பு ஆகியவற்றை அ.ம.மு.க., ஏற்றுக் கொள்ளவில்லை. ஈ.வெ.ரா., குறித்து சீமான் சுய விளம்பரத்திற்காக தாக்கி பேசுகிறார்.
கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு அணை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் முதல் டங்ஸ்டன் வரை தி.மு.க.,வின் நிலைப்பாடு இரட்டை வேடம். 2026 தேர்தலுக்கு முன்பு மதம், ஜாதி சண்டைகள் உருவாக்க சதித்திட்டம் திட்டப்படுகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
டங்ஸ்டன் விஷயத்தில் ஏலம் விடலாமா என டில்லியில் இருந்து கடிதம் வந்த போதே பல்லுயிர் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியிருந்தால் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். மக்கள் உணர்வை புரிந்து கொண்டு பா.ஜ., தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் வலியுறுத்தியதால் டங்ஸ்டன் ஏலம் ரத்தானது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணைவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சபேனையும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலையில் முருகன், சித்தர்கள், தர்காவில் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் தொடர்வதையே போலீசாரும், அரசும் முறையாக கையாள வேண்டும்.
திருப்பரங்குன்றம் பகுதி அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், என்றார்.

