நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே தாயில்பட்டி அருகாமைப் பள்ளியில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவரின் உருவத்தை மாணவி மாலைக் கனி கோலமாகவரைந்திருந்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குறள் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
1330 குறள்கள் சொன்ன ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா குறள் வகுப்பு பயிற்சியை துவங்கி வைத்தார்.
வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாயில்பட்டியைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு குறள் வகுப்புகள் எடுக்கப்படும். திருவள்ளுவர் வேடமணிந்து மாணவி நிஷா குறள்களை சொன்னார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
ஏற்பாடுகளை ஆசிரியர் ஜெயமேரி செய்தார்.

