/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் திருவிளக்கு பூஜை
/
இருக்கன்குடியில் திருவிளக்கு பூஜை
ADDED : டிச 15, 2024 06:16 AM
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இருக்கன்குடி அணை திறக்கப்பட்டதால் இருஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இருக்கன்குடி சின்ன மாரியம்மன்கோயிலில் உள்ள மாரியம்மனுக்கு இளநீர் பால் பன்னீர் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் நடந்தது.
இருக்கன்குடி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த பெண்கள் 108 திருவிளக்குகளுடன் பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சேலை தேங்காய் குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரிஏற்பாடுகளை செய்திருந்தார்.