/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
/
பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
ADDED : ஏப் 30, 2025 06:31 AM
விருதுநகர்; விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கூறியதாவது:
ராஜபாளையத்தில் ட்ரூல்டோர் இந்தியா பிரைவேட் லிட் என்ற நிறுவனம் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் பகுதி வாரியாக கடை உரிமை அளித்து வருவதாகவும், அதில் மக்கள் முதலீடு செய்தால் அதிகப்படியாக சம்பாதிக்கலாம் என கூறி மக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதால் இந்நிறுவனம் மீது விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து புகார் அளிக்காத நபர்கள் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நேரில் உரிய அசல் ஆவணங்களுடன் புகார் தெரிவிக்கலாம், என்றார்.