/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நேர்மையாக வாழ்பவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை
/
நேர்மையாக வாழ்பவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை
நேர்மையாக வாழ்பவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை
நேர்மையாக வாழ்பவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை
ADDED : மார் 22, 2025 05:56 AM
சிவகாசி: தமிழகத்தில் நேர்மையாக வாழ்பவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை ஏற்படுகிறது, என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசியில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி தலைமை வகித்தார். சிறுபான்மையினர் நல பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
பெண்களுக்கு சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் பட்டாசு, தீப்பட்டி, நெசவு என அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க பட்டாசு தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. தற்போது முடக்கப்பட்டுள்ளதால் அதிக விபத்துக்கள் நடக்கிறது.
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்படுகிறார்.
திருநெல்வேலியில் என்னை கொலை செய்து விடுவார்கள் என வீடியோ பதிவு வெளியிட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கு தமிழக அரசால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை.
தமிழகத்தில் நேர்மையானவர்களுக்கு சமூக விரோதிகளால் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கல்லுாரி மாணவிகள் உட்பட பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார். பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.