/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் கைது
/
மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் கைது
ADDED : அக் 12, 2025 06:33 AM
சிவகாசி : சித்துராஜபுரம் வெங்கடசாமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் 80. தனியாக வசித்து வரும் இவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மாரனேரி தேன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் 34, குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து கிருஷ்ணம்மாளின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க செயின் பறித்து ஓடினார். டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் லட்சுமி 80. நெசவு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தெருவில் நின்ற போது அங்கு வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயினை பறித்துள்ளார்.
இதில் பாதி செயினை மூதாட்டி பிடித்த போது மீதி செயினுடன் அவர் தப்பி ஓடிவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் அப்பகுதி கேமராக்களை ஆய்வு செய்து சித்தாலம்புத்தூர் முனியப்பனை 2 மணி நேரத்தில் கைது செய்து அவரிடம் இருந்த மீதமுள்ள செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.