/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் பாய்ந்து விபத்து; ஒரே குடும்பத்தில் மூவர் இறப்பு
/
மின்சாரம் பாய்ந்து விபத்து; ஒரே குடும்பத்தில் மூவர் இறப்பு
மின்சாரம் பாய்ந்து விபத்து; ஒரே குடும்பத்தில் மூவர் இறப்பு
மின்சாரம் பாய்ந்து விபத்து; ஒரே குடும்பத்தில் மூவர் இறப்பு
ADDED : ஏப் 15, 2025 03:39 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து, ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரிசேரியைச் சேர்ந்த மைக்செட் உரிமையாளர் திருப்பதி, 28. இவர், அப்பகுதி மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவரது தம்பி தர்மர், 15, மைக்செட்டிற்கான ஒயரின் ஒரு பகுதியை வெறும் காலால் மிதித்து, மறுமுனையை கேபிள் 'டிவி' ஒயரின் மேற்பகுதி வழியாக இழுத்துக் கட்ட, அதன் மீது வீசினார்.
அப்போது, அந்த ஒயர், உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டதில் தர்மர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக்கண்ட திருப்பதி, அவரது சித்தப்பா மகன் கவின், 15, ஆகியோர் தர்மரை காப்பாற்ற முயன்றனர். தர்மர் சுதாரித்து விலகிய நிலையில், ஒயரை பிடித்த திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது.
திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது ஏழு மாத கர்ப்பிணி மனைவி லலிதா, 25, பாட்டி பாக்கியம், 65, ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தர்மர், கவின் காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 பேர் பலி
இதே போல, தேனி மாவட்டம், உத்தப்பநாயக்கனுார் அருகே நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த விவசாயி மாயி, 35, நேற்று ஊரில் கோவில் திருவிழாவிற்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு, தோட்டத்திற்கு திரும்பிச் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தார்.
பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்தவர் மலைசாமி, 38, வீட்டில் கேபிள் 'டிவி' ஒயரை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.