/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணி நேரத்தில் இல்லாத மூன்று சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட்
/
பணி நேரத்தில் இல்லாத மூன்று சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட்
பணி நேரத்தில் இல்லாத மூன்று சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட்
பணி நேரத்தில் இல்லாத மூன்று சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட்
ADDED : டிச 20, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பணி நேரத்தில் இல்லாத மூன்று சத்துணவு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் டிச. 11 காலை 11:00 மணிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர், உதவி கணக்கு அலுவலர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது இப்பள்ளி சத்துணவு மையம் மூடப்பட்டிருந்தது. சத்துணவு அமைப்பாளர் கணபதி, சமையலர் குருலட்சுமி, சமையல் உதவியாளர் அம்சவள்ளி பணிக்கு வரவில்லை. இதையடுத்து மூவரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.