/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரிகள் நேருக்கு நேர் மோதல் டிரைவர்கள் உட்பட மூவர் பலி
/
லாரிகள் நேருக்கு நேர் மோதல் டிரைவர்கள் உட்பட மூவர் பலி
லாரிகள் நேருக்கு நேர் மோதல் டிரைவர்கள் உட்பட மூவர் பலி
லாரிகள் நேருக்கு நேர் மோதல் டிரைவர்கள் உட்பட மூவர் பலி
ADDED : ஜூலை 11, 2025 02:14 AM

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், டிரைவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலையம்பட்டி சந்திப்பு அருகில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, துாத்துக்குடியில் இருந்து கரூர் பேப்பர் கம்பெனிக்கு, பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, கோவையில் இருந்து துாத்துக்குடிக்கு பைப்புகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பாலையம்பட்டி சந்திப்பு அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, மறுபக்கம் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், கன்டெய்னர் லாரி டிரைவர் துாத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயமுருகன், 45, மற்றொரு லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கோட்டையூரைச் சேர்ந்த அஜித்குமார், 28, கிளீனர் ராஜதுரை, 26, ஆகிய மூவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
டவுன் போலீசார், தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் உருக்குலைந்த லாரிகளை அப்புறப்படுத்தி, உயிரிழந்தவர்களை மீட்டனர்.
விபத்து காரணமாக, மதுரை - துாத்துக்குடி நான்குவழி சாலை போக்குவரத்து, ஒரு வழியில் மட்டும் அனுமதிக்கப் பட்டது.