/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க பயணச்சீட்டு ஆய்வாளர்கள்
/
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க பயணச்சீட்டு ஆய்வாளர்கள்
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க பயணச்சீட்டு ஆய்வாளர்கள்
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க பயணச்சீட்டு ஆய்வாளர்கள்
ADDED : நவ 11, 2024 04:06 PM
விருதுநகர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மேலாண் இயக்குநர் சிங்காரவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த ஆகஸ்ட் 21 முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து விருதுநகர் உள்ளூர் புறநகர் பஸ் சேவைகள் விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மண்டலங்களால் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு பை-பாஸ் ரைடர் தவிர விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக விருதுநகர் கடக்கும் அனைத்து புறநகர் பஸ்களும் தொலைதூர பஸ்கள் தவிர்த்து விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகின்றன.
விருதுநகர் மண்டல பஸ்கள், விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சிக்கு இயக்கப்படுகிறது. மேலும் விருதுநகரில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் புதுச்சேரி வரையிலான நீண்ட வழி சேவைகள் எஸ்.இ.டி.சி.லிமிடெட் நிறுவனத்தால் மட்டுமே இயக்கப்பட்டன. கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது இயக்கப்படவில்லை.
கோவில்பட்டியில் இருந்து கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சிவகாசி, கொடைக்கானல், சேலம், திருப்பூர், ஈரோடு, போன்ற ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. நீண்ட வழித்தடப் பிரிவு பஸ்கள் அனைத்தும் விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக மட்டுமே இயக்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்டை பகல் மற்றும் இரவு நேரங்களில் இறக்கி ஏற்றிச் செல்வதற்கு, பணியாளர்கள், கிளை மேலாளர்கள், பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர்கள் மற்றும் வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் வருவதை கண்காணிக்க பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டை எப்போதும் பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.