/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி பஸ் ஸ்டாண்ட் பணி தீவிரம்
/
திருச்சுழி பஸ் ஸ்டாண்ட் பணி தீவிரம்
ADDED : பிப் 01, 2025 04:51 AM

திருச்சுழி: திருச்சுழியில் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரம் நடந்து வருகிறது.
திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த இடம், நூற்றாண்டு புகழ்வாய்ந்த திருமேனிநாதர் கோயில், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு காசி, ராமேஸ்வரத்திற்கு இணையான குண்டாறு உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் இந்த புண்ணிய ஸ்தலமான திருச்சுழியில் வந்து இறங்குவதற்கு பஸ் ஸ்டாண்ட் இல்லை. பஸ் ஸ்டாண்ட் இன்றி மக்கள் சிரமப்பட்டனர். பஸ் ஸ்டாண்டை தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
ஒரு வழியாக 2024, செப். மாதம் திருச்சுழி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருச்சுழி - நரிக்குடி ரோட்டில் பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு 5 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 45 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விடும் என அதிகாரிகள் கூறினர்.