/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெயரளவிற்கு செயல்படும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் முழுமையாக இயங்க எதிர்பார்ப்பு
/
பெயரளவிற்கு செயல்படும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் முழுமையாக இயங்க எதிர்பார்ப்பு
பெயரளவிற்கு செயல்படும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் முழுமையாக இயங்க எதிர்பார்ப்பு
பெயரளவிற்கு செயல்படும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் முழுமையாக இயங்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 03, 2025 05:48 AM

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் பெயர் அளவிற்கு மட்டுமே செயல்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
திருத்தங்கலில் விருதுநகர் ரோட்டில் 2013ல் ரூ.3.69 கோடியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு 2016 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், சுகாதார வளாகங்கள், பொருட்கள் பாதுகாக்கும் அறை, டிரைவர் நடத்துனர் ஓய்வு அறை, குடிநீர் வசதி, மேல்நிலை குடிநீர் தொட்டி, உயர் கோபுர மின் விளக்குகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த பஸ் ஸ்டாண்ட் அதன் பின் பயன்பாட்டில் இல்லை.
இந்நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை வணிக வளாகங்கள் குடிநீர் வசதி சுகாதார வளாக வசதி, ஓய்வு அறைகள் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் , அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து சென்றன. ஆனால் அதன் பின்னர் பஸ்கள் மீண்டும் பஸ் ஸ்டாண்டினை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது. எப்போதாவது ஒரு சில பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன.
பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள வணிக வளாகங்கள் எதுவுமே பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மக்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பஸ் ஏறுவதற்கு தயாராக இல்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள வணிக வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்வதன் மூலம் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது.