/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
/
பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 02, 2024 04:53 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான பிளவக்கல் பெரியாறு அணைக்கு பொதுமக்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு, வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சென்று வந்தனர்.
பெரியாறு அணை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு மக்களை அனுமதிக்கலாம் என வனத்துறை தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், பொதுப்பணித் துறை சார்பில் இதுவரை எந்த பாதுகாப்பு வேலியும் போடப்படாததால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு மக்கள் செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் சுற்றுலா தலம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
எனவே, பிளவக்கல் பெரியாறு அணையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்தும், பூங்காவை முறையாக சீரமைத்தும் மக்கள் வந்து செல்லும் சூழலை மாவட்ட அரசு நிர்வாகம் எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

