/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள்; ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு
/
புது பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள்; ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு
புது பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள்; ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு
புது பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள்; ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 11, 2025 03:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை இயங்கும் டவுன் பஸ்களை புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று திரும்புமாறு இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பல ஆயிரம் மக்கள் தினமும் தங்கள் தொழில், வேலை வாய்ப்புக்காக ராஜபாளையத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நேர்வழியாகவும், மம்சாபுரம், இடையங்குளம், புதுப்பட்டி வழியாகவும், வன்னியம்பட்டி, மொட்டமலை, சத்திரப்பட்டி வழியாகவும், பெருமாள் தேவன் பட்டி, அட்டைமில் முக்கு ரோடு வழியாகவும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பஸ்கள் அனைத்தும் ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டுடன் நிறுத்தப்படுவதால் அதனை கடந்து செல்ல வேண்டிய மக்கள், அங்கிருந்து வேறு ஒரு டவுன் பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பண விரயம், நேர விரையத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் ஆளாகி வருகின்றனர். இதை தவிர்க்க ராஜபாளையத்திற்கு இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களையும் புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பும் வகையில் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.