நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி 56 வீட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பட்டாசு ஆலையில் லோடுமேன் வேலை பார்க்கும் பாலகுரு 26. இவரது மனைவி காளீஸ்வரி 24. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகன் உள்ளார்.
பாலகுருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் காளீஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் பாலகுரு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.