/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு
/
நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு
ADDED : நவ 25, 2024 05:02 AM
சிவகாசி : கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் தீர்மானத்தை கண்டித்து சிவகாசியில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என வர்த்தக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பது என செப்டம்பரில் புதுடில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி நவ. 29ல் சிவகாசியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகாசி வர்த்தக சங்கத் தலைவர் ரவி அருணாச்சலம் கூறுகையில், சிறு வணிகர்கள் கடைகளுக்கு செலுத்தும் வாடகைக்கு அக். 10 முதல் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதிலும் நவ. 29ல் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
அதன்படி சிவகாசியிலும் முழு அடைப்பு போராட்டம் நடக்கும், என்றார்.