/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு
/
அருப்புக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு
ADDED : செப் 25, 2024 03:31 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நல்லூர் வியாபாரிகள் சங்கம் சார்பாக இ. 3 சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கடையடைப்பு , ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், எம்.டி.ஆர்., நகர் மணி நகரம், பெர்கின்ஸ்புரம், அஜிஸ் நகர், மீனாம்பிகை நகர், ரயில்வே பீடர் ரோடு, எஸ்.பி.கே., கல்லூரி சாலை, நல்லூர் மற்றும் வாழவந்தபுரம் பகுதியில் குடியிருக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக இ.3 சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு 70 சதவிகிதம் பணி முடிந்த நிலையில், மீதி பணியை செய்யாமல் பல ஆண்டுகளாக நகராட்சி செய்யாமல் கடத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று காலை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நல்லூர் வியாபாரிகள் சங்கம், ரயில் பயணிப்போர் நல சங்கம் மற்றும் அ.தி.மு.க., த.ம.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., உட்பட கட்சி நிர்வாகிகள் வியாபாரிகள் இ.3 சாலையை செயல்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையொட்டி புதிய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள பகுதி வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
ஏற்பாடுகளை நல்லூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரக்கத் முகைதீன், ஆலோசகர் முகமது சிக்கந்தர் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் யோக வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் தாமஸ், நகரச் செயலாளர் காத்தமுத்து, த.மு.மு.க., மாவட்டத் தலைவர் மதார்கான், இந்திய முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் சையது ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் நன்றி கூறினார்.