/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் பாரம்பரிய பொங்கல் விழா
/
ராஜபாளையத்தில் பாரம்பரிய பொங்கல் விழா
ADDED : ஜன 08, 2024 05:48 AM
சேத்துார், : ராஜபாளையம் அருகே தேவதானத்தில் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை சார்பில் நடந்த வேர்களை தேடி கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில் பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
ஆஸ்திரேலியா, பிஜி, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் 57 பேருக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மேள தாளத்துடன் மாட்டு வண்டிகளில் அழைத்து சென்று பொங்கலிடும் நிகழ்வு நடந்தது.
கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், முறியடித்தல் இசை நாற்காலி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.
சுற்றுலா அலுவலர் உமாதேவி ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.