/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் முக்குராந்தலில் வடிகால் பாலம் பணியால் போக்குவரத்து மாற்றம்
/
சாத்துார் முக்குராந்தலில் வடிகால் பாலம் பணியால் போக்குவரத்து மாற்றம்
சாத்துார் முக்குராந்தலில் வடிகால் பாலம் பணியால் போக்குவரத்து மாற்றம்
சாத்துார் முக்குராந்தலில் வடிகால் பாலம் பணியால் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 24, 2025 04:14 AM

சாத்துார்: சாத்துார் முக்கு ராந்தலில் நடைபெறும் பாலப் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாத்துார் மரியன் ஊருணி முதல் வைப்பாறு வரையிலான மழை நீர் வடிகால் இடித்து அகற்றப்பட்டு மீண்டும் கட்டப்பட்டு வருகிறது.பழைய படந்தால் ரோடு முதல் வடக்கு ரதவீதி காளியம்மன் கோயில் வரை தற்போது புதியதாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.
சாத்துார் முக்குராந்தல் வழியாக செல்லும் இந்த மழை நீர் வடிகால் வைப்பாற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளாக மழை நீர் வடிகால் தோண்டப்படாததால் இதில் சென்று வந்த கழிவுநீர் சரிவர செல்லவில்லை.
தற்போது முக்குராந்தல் பகுதியில் மழை நீர் வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவில்பட்டி நாகர்கோவில் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள்  மெயின் ரோடு வழியாக செல்லாமல் நான்கு வழிச்சாலை  வழியாக சுற்றிச் செல்கின்றன. உள்ளூர் வாகனங்களும் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருக்கன்குடி கோட்டூர் மன்னார் கோட்டை நென்மேனி அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்கள் மட்டும் ரயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தற்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் முக்கு ராந்தலில் பள்ளம் தோண்டும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் மட்டும் மெயின் ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு  காய்கறி லோடு ஏற்றி வரும் வாகனங்களும் பர்னிச்சர்கடைகளுக்கு சாமான்கள் கொண்டு வரும் வாகனங்களும் நகருக்கு வெளியே நின்று பொருட்களை இறக்கி ஏற்றி செல்லும் நிலை உள்ளது.
முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென முக்கு ராந்தலில் பாலத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருவதால் வியாபாரிகளும் மக்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். முக்குராந்தல் பகுதியில்குடிநீர் பகிர்மானக் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் செல்கின்றன . இவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளம் தோண்டி விரைந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

