/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி
ADDED : ஏப் 11, 2025 04:22 AM
சாத்துார்: ஏழாயிரம் பண்ணையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழாயிரம் பண்ணை ஊராட்சி பகுதியில் உள்ள 18 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமமாக உள்ளது. ஏழாயிரம் பண்ணையில் பள்ளிகள், தொழில், வர்த்தக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கனிசமான அளவில் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்த போதும் சாலை விரிவாக்கப்பணி பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.மேலும் தற்போது மெயின் ரோடு, பஜார் பகுதி, சங்கரன் கோயில் ரோடு, பகுதியிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது.
காலை மாலை நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலையை விரிவாக்கம் செய்வதோடு இந்த பகுதியில் பைபாஸ் ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

