/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
/
பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 18, 2025 06:38 AM

விருதுநகர்: விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி அணிவகுக்கும் வாகனங்களாலும், அதை சுற்றியுள்ள தெருக்களில் செட் அமைத்து ஆக்கிரமிக்கும் கார்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் வெளிப்புறம் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ரோடு அகலமாக இருப்பதால் பலர் இதை வாகன நிறுத்துமிடம் போன்று பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்தி அடுத்தடுத்து வாகனங்கள் பின்னால் நிறுத்தி கொள்கின்றனர்.
இதனால் புளுகனுாரணி ரோடே போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் இந்த ரோடு சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதே போல் விருதுநகரில் நிறைய குறுகிய தெருக்கள் உள்ளன. பெரும்பாலான வீடுகள் வாகன நிறுத்த வசதி இன்றி கட்டப்பட்டுள்ளதால் டூவீலர்கள் தெருவில் நிறுத்தப்படுவது வழக்கம். கார்களை வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் மாதக்கணக்கில் காப்பகங்களில் வைத்து தேவைப்படும் போது எடுத்து கொள்கின்றனர். ஆனால் சில பகுதிகளில் செட் அமைத்து தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தெருக்கள் குறுகி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மக்களின் பரிதவிப்போடு பாதைகளை கடக்க வேண்டி உள்ளது.
குறிப்பாக தர்க்காஸ் தெருவில் அதிகமாக உள்ளது. தெருக்களில் அதிகளவில் கார்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் சில தெருக்களில் பாதைகளே மறையும் அளவுக்கு கார்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. நகரின் புதிதாக கட்டப்படும் வணிக கடைகளில் பார்க்கிங் வசதி எதையும் நகரமைப்பு பிரிவினர் உறுதி செய்வதில்லை. இதனால் நாளுக்கு நாள் ரோட்டில் கார் நிறுத்துவதும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் புது புதுவிதங்களில் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. நகரமைப்பு பிரிவின் தோல்வியடைந்த செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் தான் அல்லல்படுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் குஷியில் தான் உள்ளனர்.