/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளியூர் பக்தர்கள் வருகையால் ஸ்ரீவி.,யில் போக்குவரத்து நெருக்கடி
/
வெளியூர் பக்தர்கள் வருகையால் ஸ்ரீவி.,யில் போக்குவரத்து நெருக்கடி
வெளியூர் பக்தர்கள் வருகையால் ஸ்ரீவி.,யில் போக்குவரத்து நெருக்கடி
வெளியூர் பக்தர்கள் வருகையால் ஸ்ரீவி.,யில் போக்குவரத்து நெருக்கடி
ADDED : ஜூலை 22, 2025 03:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா துவங்கியுள்ள நிலையிலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் இடிக்கப்படும் நிலையிலும் நகரின் பஜார் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று முன்தினம் முதல் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா துவங்கி உள்ளதால் ஏராளமான வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வர துவங்கியுள்ளனர். இதனால் கோயில் மாடவீதிகள் ரதவீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுபோல் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதியில் கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் பஸ்கள் வந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ்கள் எளிதாக வந்து செல்ல முடியவில்லை.
இதனை தவிர்க்க ராஜபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி, சர்ச் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். பஸ் ஸ்டாண்ட் தெற்கே மணிக்கூண்டு பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதி வழியாக மதுரை, தேனி போன்ற வெளியூர் பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.
எப்போதும் போல் டவுன் பஸ்களும், மினிபஸ்களும் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டும். இதற்கு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.