/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு திண்டாடும் வாகன ஓட்டிகள்
/
அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு திண்டாடும் வாகன ஓட்டிகள்
அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு திண்டாடும் வாகன ஓட்டிகள்
அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு திண்டாடும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 22, 2024 03:43 AM

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் செல்லும் பஸ்கள், லாரிகள் ஆகிய கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இவ்வழியாக செல்லும் சக வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றன.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனை, பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனை ரோட்டில் செல்லும் வாகனங்களின் அனைத்து நேரங்களிலும் போக்கு வரத்து நிறைந்து காணப்படுகிறது.
காரியப்பட்டி, மல்லாங்கிணர் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து விருதுநகர் நோக்கி வரும் வாகனங்கள், பேராலி ரோட்டில் உள்ள ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் தினமும் அரசு மருத்துவமனை ரோடு வழியாக செல்கின்றன.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்ப்பதற்காக காலை, மாலை நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள் அதிக அளவில் டூவீலர், ஆட்டோ, பஸ்களில் வந்து செல்கின்றனர்.இதனால் விருதுநகர் அரசு மருத்துவமனை ரோடு எல்லா நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் வாகன நெரிசல் அதிகளவில் ஏற்படும் இடமாக மாறியுள்ளது. இந்த நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் முறையாக ஈடுபடுவதில்லை.
ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றன. மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை உடனடியாக இடமாறுதல் செய்ய முற்படும் போது நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இருபுறமும் எதிரெதிராக உள்ள பஸ் ஸ்டாப்களை இடமாறுதல் செய்து நடவடிக்கை எடுத்தால் பஸ்களால் ஏற்படும் நெரிசல் குறையும்.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.