நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் 69, இவரது மனைவி ஜெயலட்சுமி 60, இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தனர்.
நேற்று அதிகாலை 5:10 மணிக்கு ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்து காயமடைந்தார். அங்கிருந்த பயணிகளும், ரயில்வே போலீசாரும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில்வே போலீசார் விசாரித்தனர்.