ADDED : ஏப் 05, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:பயணிகளின் வசதிக்காக கோடை சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஞாயிறு தோறும் இயக்கப்படும் நாகர்கோவில் -- தாம்பரம் (06012), கொச்சுவேலி -- தாம்பரம் ஏ.சி., (06036) ஆகிய ரயில்களின் சேவை மே 4 வரை நீட்டிக்கப்படுகின்றன.
திங்கள் தோறும் இயக்கப்படும் தாம்பரம்- - நாகர்கோவில் ரயில் (06011) மே 5 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் தாம்பரம் -- கொச்சுவேலி ரயில் (06035) மே 2 வரை நீட்டிக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஏப்., 5) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

