/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகழாய்வு பொருட்கள் ஆவணப்படுத்தும் பயிற்சி
/
அகழாய்வு பொருட்கள் ஆவணப்படுத்தும் பயிற்சி
ADDED : மே 29, 2025 01:37 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாய்வில் பொருட்களை கையாளுவது, ஆவணப்படுத்துவது குறித்து பி.எஸ்.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி தமிழ் துறை மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
மூன்றாம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, சங்கு வளையல்கள், வட்ட சில்லு, சூது பவள மணி உள்ளிட்ட 5003 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவைகளை தற்போது ஆவணப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் ஏற்கனவே நடந்த இரு அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகாசி பி.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை மாணவர்கள் அகழாய்வில் கிடைத்த பொருட்களை கையாள்வது குறித்தும் ஆவணப்படுத்துவது குறித்தும் பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது, பொருட்களை சுத்தப்படுத்தி எவ்வாறு கையாள்வது, அளவீடு செய்வது, ஆவணப்படுத்துவது குறித்து ஒரு வாரம் பயிற்சி அளித்தார்.