நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை ரமணாஸ் பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துவங்கும் விழா நடந்தது.
கல்லுாரியில் மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரி ஒர்க், அழகுக் கலை, ஆங்கில பேச்சு, அரசு தேர்வுகளுக்கான பயிற்சி, பாரம்பரிய கலையான சிலம்ப பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் கற்று கொடுக்கப்படுகின்றன.
ஏற்பாடுகளை கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன், செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லுாரி செயலர் சங்கரநாராயணன், போக்குவரத்துச் செயலர் விக்னேஷ், துணை செயலாளர் அருண், பேராசிரியர்கள் செய்தனர்.