தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குப்பை மேடாக இருந்து சோலைவனமாக மாற்றம்

 குப்பை மேடாக இருந்து சோலைவனமாக மாற்றம்

 குப்பை மேடாக இருந்து சோலைவனமாக மாற்றம்


ADDED : மார் 09, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருகி வரும் ஆலைகள் வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால் வளிமண்டலத்தில் வெப்பத்தின் தாக்காத்தை அதிகரித்து மழை, வெயி, பனி ஆகிய காலநிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

காடுகளை அழித்தல், விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றுதல் போன்றவற்றால் பருவநிலையின் சமநிலை தவறிவிட்டது. இதனால் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பாதிக்கப் படுகின்றன.

கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வளர்பருவத்திலேயே இயற்கை மாசுபடுத்தாமல் வாழ்கையை வாழ்தல், இயற்கையை பேணுதல் போன்றவற்றை பற்றி தெளிவான அறிவுரை வழங்குவது இன்றியமையாததாகிறது.

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே குப்பை மேடாக இருந்த பகுதியை சீரமைத்து ஒரு ஏக்கரில் கொய்யாத்தோட்டமாக மாற்றும் பணியை ஊராட்சி நிர்வாகத்தினர் நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து துவக்கினர்.

இந்த தோட்டத்தில் தற்போது கொய்யா மரங்கள் காய்களை கொடுக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. இங்குள்ள மரங்களுக்கு மண்புழு உரம், இயற்கை உரங்கள் மட்டும் ஈடுவதால் பழங்கள் சுவையானதாக கிடைக்கிறது. இங்கிருந்து கிடைக்கும் பழங்கள் இப்பகுதி மக்களுக்கு மட்டும் கிலோ ரூ.20க்கு ஊராட்சி நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சத்திரரெட்டியப்பட்டியின் காவேரி நகர், ஹவுசிங் போர்டு தெருக்களின் ஓரங்களில் புங்கை, வாகை, வேம்பு, கொடுக்காபுளி, பூவரசம், அரசமரம், கொய்யா உள்பட 100க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருவதால் கோடையிலும் நன்றாக வளர்ந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us