/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்சில் படிக்கட்டு பயணத்திற்கு தேவை கடிவாளமும் கண்டிப்பும்
/
பஸ்சில் படிக்கட்டு பயணத்திற்கு தேவை கடிவாளமும் கண்டிப்பும்
பஸ்சில் படிக்கட்டு பயணத்திற்கு தேவை கடிவாளமும் கண்டிப்பும்
பஸ்சில் படிக்கட்டு பயணத்திற்கு தேவை கடிவாளமும் கண்டிப்பும்
ADDED : ஜூலை 11, 2025 03:00 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பஸ்சில் படிக்கட்டு பயணம் ஆங்காங்கே சிலர் செய்கின்றனர். கூட்டம் ஒரு காரணமாகஇருந்தாலும், சிலர் வேண்டுமென்றே படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதற்கு போலீசாரின் கடிவாளம் தேவையாக உள்ளது.
மாவட்டத்தில் பஸ்சில்படிக்கட்டு பயணம் செய்வது இன்றும் குறைந்தபாடில்லை. கடந்த காலங்களில் படிக்கட்டு பயணத்தால் பல பள்ளி, கல்லுாரி மாணவர்களின் உயிர் பறி போனது. இதனால்டிரைவர்கள், கண்டக்டர்கள் படிக்கட்டு பயணத்திற்கு கறாராக இருந்தனர். இதனால் மாணவர்கள் படியில் நிற்பது குறைந்தது.
அதே போல் பஸ் நிறுத்தங்களிலும் போலீசார் படியில் நிற்பவர்களை எச்சரித்தனர். அபராதம் விதித்தனர். இதனால் படிக்கட்டு பயணம் குறைந்தது.
குறைந்த காரணத்தால் பெரிய அளவில் தற்போது கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும், தற்போது ரீல்ஸ் மோகத்தாலும், இளம் வயதின் சாகச குணத்தாலும் சிலர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி அலட்சியம் செய்கின்றனர்.
இதை கண்டக்டர்கள்கண்டித்தாலும் கண்டுக்கொள்வதாயில்லை. மாவட்டத்தில் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது.மாணவர்களும் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்று படிக்கட்டுகளில் தொங்குவதை நிறுத்த வேண்டும். விழிப்புணர்வோடு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.
படிக்கட்டுகளில் தொங்குவதை தவிர்க்க மாணவர்கள், இளைஞர்கள் முன்வராத பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் நடவடிக்கைகளை முடுக்கவிட வேண்டும். இது போன்று ஆபத்து பயணம் செய்வோரை கண்டக்டர்கள் இறக்கிவிட வேண்டும்.