/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'குரூப் ‛டி' பணியில் சிறப்பு ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பு கருவூலத்துறை மீது குற்றச்சாட்டு

ADDED : ஜன 30, 2025 02:35 AM
விருதுநகர்,:தமிழக அரசு துறைகளில் குரூப் 'டி' பணியில் பதவி உயர்வு பெறாமல் 30 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதற்காக ஊழியர்கள் பணியாற்றும் துறைகளில் இருந்து பரிந்துரை செய்தாலும் கருவூலத்துறையினர் வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துாய்மைப்பணியாளர் உள்ளிட்ட குரூப் 'டி' பணிகளில் எவ்வித பதவி உயர்வும் பெறாமல் தொடர்ந்து 20 ஆண்டுகள், அதன் பின் கூடுதலாக 10 ஆண்டுகள் சேர்த்து 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இதற்காக ஊழியர்கள் பணியாற்றும் துறைகளில் இருந்து பரிந்துரை செய்து கருவூலத்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்க முடியாது எனக்கூறி கருவூலத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அரசாணை இருப்பதை சுட்டி காட்டியும், தாங்களால் வழங்க முடியாது எனக்கூறுவதை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என பரிந்துரை செய்த ஒருசில துறை அலுவலர்கள் கேட்கும் போது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறப்பு ஊதிய உயர்வு வழங்குகின்றனர். மற்றவர்களுக்கு கிடப்பில் போடப்படுகிறது. ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்க வேண்டிய சிறப்பு ஊதிய உயர்வை வழங்குவதில் கருவூலத்துறையினர் இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.