/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இனி பேஸ்மேக்கர் கருவியில் சிகிச்சை
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இனி பேஸ்மேக்கர் கருவியில் சிகிச்சை
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இனி பேஸ்மேக்கர் கருவியில் சிகிச்சை
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இனி பேஸ்மேக்கர் கருவியில் சிகிச்சை
ADDED : அக் 08, 2025 01:14 AM
விருதுநகர்; 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் முதன் முறையாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தற்காலிக பேஸ் மேக்கர் கருவி சிகிச்சை பயன்பாட்டை டீன் ஜெயசிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார். 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் முதன் முறையாக விருதுநகரில் துவங்கப்பட்டுள்ளது.
இருதய துடிப்பு குறைவான நோய்கள், அரளி விதை உட்பட சில வகை விஷம் உண்டதற்கான சிகிச்சைகள், மாரடைப்பு, இருதய நோய்களால் இருதயத்தின் துடிப்பு குறையும் போது பேஸ்மேக்கர் கருவியால் இதய துடிப்பை சீராக்கி குணப்படுத்த முடியும்.
மேலும் விபத்து, அவசர சிகிச்சைப்பிரிவு, கதிரியக்கப்பிரிவு ஆகிய இரு துறைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.12 லட்சத்தில் புதிய இரு எக்ஸ்ரே மிஷின்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புவேல், அறுவை சிகிச்சை துறை தலைவர் அமலன், டாக்டர் சங்கர், அவசர சிகிச்சை துறை தலைவர் ராணி, மல்லிகா, கதிரியக்கத்துறை தலைவர் அருண், ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.