/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பட்ட மரங்கள்
/
சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பட்ட மரங்கள்
ADDED : மார் 27, 2025 06:08 AM

சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில் விழும் நிலையில் உள்ள பட்டுப் போன மரங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ரயில்வே வழித்தடத்தில் தினமும் 10 க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன.
இதனால் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் இரு புறமும் உள்ள நடைபாதையில் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் 80 சதவீத மரங்கள் முழுமையாக பட்டு போய்விட்டன. காற்று அடிக்கும் போது கிளைகள் அவ்வப்போது முறிந்து கீழே விழுகின்றது. ஒரு சில மரங்கள் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்திலேயே உள்ளனர். எனவே நடைபாதையில் உள்ள பட்ட மரங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பட்டுப்போன மரங்களை அகற்றுவதற்கு மூன்று முறை டெண்டர் விடப்பட்டது. யாரும் டெண்டர் எடுக்காததால் மரங்கள் அகற்றும் பணி நடக்கவில்லை. மீண்டும் டெண்டர் விடப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.